Price: ₹50.00
(as of Aug 31, 2023 13:22:54 UTC – Details)
திரையுலகில் உச்ச நட்சத்திரமான கதாநாயகனுக்கும் அவனின் தீவீர ரசிகையான கதாநாயகிக்கும் இடையே நடக்கும் மோதலையும் காதலையும் என் பாணியில் கொஞ்சம் காமெடி கலந்து எழுதி இருக்கிறேன்.
கதையிலிருந்து ஒரு குட்டி டீஸர்
“அப்பா! நான் கடைசியா கேட்குறேன்.. என்னை சென்னைக்குப் படிக்க அனுப்புவீங்களா? மாட்டீங்களா?”
ஒருமுறை மகளை நிதானமாக உற்று பார்த்து விட்டு, “முடியாது!!” என்று சாவகாசமாகச் சொன்னார் பிரபாகரன்.
“ம்ம்ம்கூம்.. இதைச் சொல்ல இவ்ளோ பில்டப்பா?” என்று கணவனின் செய்கையைக் கண்டு மனதிற்குள் கொக்கரித்தார் தேவிகா.
“அப்போ சரி.. நான் இதைக் குடிச்சுட்டு சாவுறேன்” என்ற மகளின் பேச்சைக் கேட்ட தேவிகா, ‘இந்த ப்ளான் பத்தி நம்மகிட்ட ஒண்ணுமே சொல்லலையே?’ என்று ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டார்.
ஆனால் பிரபாகரனோ நெஞ்சம் பதறவுமில்லை.. சித்தம் சிதறவுமில்லை..
“எப்போ குடிப்ப?” என்று ஆர்வமாகக் கேட்டார்.
அதில் காண்டாகி போனவள், “அம்மா!” என்று கத்தினாள்.
“என்னம்மா?” என்று மகளின் அருகில் ஓடினார் தேவிகா.
“நான் விஷத்தைக் குடிக்கப் போறேன். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
“என்னது இது விஷமா?” என்று மகளிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு நின்றவரின்
பொறுமையில் பொங்கி எழுந்தவளோ, அவரை தீப்பார்வை பார்த்து வைத்தாள்.
“அய்யய்யோ! என் பொண்ணு விஷத்தை குடிக்கப் போறாளே. யாராவது வந்து காப்பாத்த கூடாதா? காப்பாத்த கூடாதா?” என்று சடுதியில் சுதாரித்து கணவரின் முன் இரு கைகளையும் ஆட்டி ஆட்டி கதற ஆரம்பித்தார்.
பிரபாகரனோ, அந்தக் கைகள் இரண்டையும் தன் ஒரு கையால் பிடித்து நிறுத்தி,
“ஏன் நீ என்ன பூப்பறிச்சுக்கிட்டு இருக்கியா? நீயே காப்பாத்த வேண்டியது தானே?” என்று எகிறி கேட்கவும் வாயடைத்துப் போன தேவிகா, அடுத்து என்ன பண்ணுவது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே தன் கடைசி பிளானும் சொதப்பியதில் எரிச்சல் கொண்ட சுமி, கையில் இருந்த பாட்டிலைக் கீழே வைத்து விட்டுத் தந்தையை நெருங்கினாள்.
“பொண்ணு சாகப் போறாளேன்னு கொஞ்சமாவது பயம் இருக்கா? கொஞ்சமாவது என் மேல பாசம் இருக்கா? அது இருக்கா? இது இருக்கா?” என்று தந்தையிடம் வாதாடிக் கொண்டு இருந்த நேரம், அங்கே வந்து சேர்ந்தான் கார்த்திக்.
“அதெல்லாம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? சித்தி எனக்கு குடிக்க ஏதாவது ஜூஸ் இருக்கா?” என்று கிண்டலாகக் கேட்டபடி வந்து நின்றான்.
அவனின் கேள்விக்கு தேவிகா, “அங்கே ப்ரிட்ஜில்..” என்று தன்னியல்பாய் சொல்லி முடிக்கும் முன்.. “இதோ! இங்கேயே இருக்கே..” என்று பாய்ந்து வந்து டீபாயின் மீது இருந்த பாட்டிலைத் திறந்து மடமடவென குடித்து முடித்தான் கார்த்திக்.
அவன் அப்படிச் செய்ததற்கான காரணம் சுமி விஷத்தைப் பத்து ரூபாய் கூல்ட்ரிங்க் பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தாள். அதைத்தான் இந்த அன்பு சகோதரன் ஆர்வமாய் தனது வாய்க்குள் ஊற்றியிருந்தான்.
அவனின் ‘கடகட’வில் ஸ்தம்பித்துப் போய் நின்ற மூவரில் முதலில் பேசியது தேவிகா தான்.
“எல்லாத்தையும் குடிச்சுட்டியாடா?”
“ஹோ..” என்று தலையாட்டி சொன்னவன், மேலும், “என்ன ஜூஸ் இது? பழைய ஸ்டாக்கா? கொஞ்சம் கசக்குது” என்று சிற்றன்னையிடம் கேள்வி எழுப்பினான்.
தேவிகாவோ, “அதை ஏன்டா குடிச்ச?” என்று அலறினார்.
“இது என்னடா வம்பா இருக்கு? சும்மா அம்போன்னு கிடந்த ஜூசை எடுத்து குடிச்சது ஒரு குத்தமா?” என்று கலாய்த்தவனின் முதுகில் ஒன்று போட்டாள் சுமி.
அது மட்டுமா?
“என்னோட விஷத்தை ஏன்டா எடுத்துக் குடிச்ச? எருமை!” என்றாள் கடுப்போடு கத்தினாள்.
“என்னது விஷமா?” என்று பேயறைந்தது போல அதிர்ந்து போனவன், அதுதான் கசந்ததா என்று எண்ணி.. “அய்யய்யோ! சித்தி அவசரப்பட்டு குடிச்சுட்டேன்.. என்னைக் காப்பாத்துங்க! ஐயோ சித்தப்பா! என்னைக் காப்பாத்துங்க!” என்று அலறினான்.
அன்புடன்
வான்மதி
ASIN : B0CGRZ3PCN
Language : Tamil
File size : 121 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 35 pages